நீண்ட நேர விமானப்பயணம் என்பது கோப்புகளை பார்வையிடுவதற்கான வாய்ப்பு - பிரதமர் மோடி


நீண்ட நேர விமானப்பயணம் என்பது கோப்புகளை பார்வையிடுவதற்கான வாய்ப்பு - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 23 Sep 2021 10:21 AM GMT (Updated: 23 Sep 2021 10:21 AM GMT)

நீண்ட நேர விமானப்பயணம் என்பது காகிதங்கள் மற்றும் கோப்புகளை பார்வையிடுதல் மற்றும் வேலைகளை செய்வதற்கான வாய்ப்பு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

3 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திரமோடி நேற்று அமெரிக்கா புறப்பட்டார். அவர் இன்று காலை அமெரிக்கா சென்றடைந்தார். 

இந்த பயணத்தின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்திக்கிறார். மேலும், குவாட் உச்சிமாநாடு மற்றும் ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இந்நிலையில், அமெரிக்க பயணத்தின் போது விமானத்தில் இருந்தவாறு பிரதமர் மோடி தனது புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், நீண்ட நேர விமானப்பயணம் என்பது காகிதங்கள் மற்றும் கோப்புகளை பார்வையிடுதல் மற்றும் வேலைகளை செய்வதற்கான வாய்ப்பு’ என தெரிவித்துள்ளார்.

Next Story