தேசிய செய்திகள்

மும்பை பங்கு சந்தை: சென்செக்ஸ் குறியீடு 958 புள்ளிகள் உயர்வு + "||" + Mumbai: The Sensex is up 958 points

மும்பை பங்கு சந்தை: சென்செக்ஸ் குறியீடு 958 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்கு சந்தை:  சென்செக்ஸ் குறியீடு 958 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 958 புள்ளிகள் உயர்ந்து 59,885 புள்ளிகளாக உள்ளது.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் வர்த்தக நிறைவில் சென்செக்ஸ் குறியீடு 958 புள்ளிகள் உயர்ந்து (1.63 சதவீதம்) 59,885 புள்ளிகளாக இன்று உள்ளது.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 276 புள்ளிகள் உயர்ந்து (1.57 சதவீதம்) 17,823 புள்ளிகளாக உள்ளது.  நிப்டி குறியீடானது ரியல் எஸ்டேட் துறை (8.4 சதவீதம்), நிதி துறை (2.3 சதவீதம்), தனியார் வங்கி (2.2 சதவீதம்) மற்றும் உலோகம் (1.5 சதவீதம்) என அனைத்து பிரிவுகளிலும் லாபத்துடன் காணப்பட்டது.

இதுதவிர, பங்குகளில் கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் 12.6 சதவீதம் உயர்ந்து ரூ.2,195.95 என்ற அளவில் இருந்தது.  இதனை தொடர்ந்து டி.எல்.எப். நிறுவனம் ரூ.401.95 என்ற அளவில் (8.9 சதவீதம் உயர்ந்து) இருந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. மும்பை பங்கு சந்தை; முதன்முறையாக 61 ஆயிரம் தொட்ட சென்செக்ஸ் குறியீடு
மும்பை பங்கு சந்தையில் முதன்முறையாக சென்செக்ஸ் குறியீடு 61 ஆயிரம் புள்ளிகள் தொட்டுள்ளது.
2. கொரோனா பாதிப்பு; குணமடைந்தோர் எண்ணிக்கை 98% ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனாவிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 98% ஆக உயர்ந்து உள்ளது.
3. உலக அளவில் கொரோனா பாதிப்பு 23.86 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதிப்பு 23.86 கோடியாக உயர்வடைந்து உள்ளது.
4. கர்நாடகத்தில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100-ஐ தாண்டியது
கர்நாடகத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியது.
5. பெங்களூருவில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு
கோலார் ஏ.பி.எம்.சி., மார்க்கெட்டுக்கு வரத்து வெகுவாக குறைந்ததன் எதிரொலியாக பெங்களூருவில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்த்துள்ளது. இதன் காரணமாக ஒரு கிலோ ரூ.70-க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் ஆதங்கம் அடைந்திருக்கிறார்கள்.