தேசிய செய்திகள்

மும்பையில் நேற்று புதிதாக 497 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + 497 new corona infections in Mumbai yesterday

மும்பையில் நேற்று புதிதாக 497 பேருக்கு கொரோனா பாதிப்பு

மும்பையில் நேற்று புதிதாக 497 பேருக்கு கொரோனா பாதிப்பு
மும்பையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
மும்பை,

மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 497 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் மும்பையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்து 39 ஆயிரத்து 861 ஆக உயர்ந்தது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 5 பேர் நேற்று உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 68 ஆக உயர்ந்தது.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு மும்பையில் 352 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அங்கு தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரத்து 73 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதனால் பரிசோதனை எண்ணிக்கை 1 கோடியே 1 லட்சத்து 327 ஆக உயர்ந்தது.

தற்போது மும்பையில் 4 ஆயிரத்து 801 பேர் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 395 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றனர். நடப்பாண்டில் அதிகபட்சமாக கடந்த ஏப்ரல் மாதம் 4-ந் தேதி 11 ஆயிரத்து 163 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஓடும் ரெயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பயணி; காப்பாற்றிய ரெயில்வே பெண் போலீஸ்
ஓடும் ரெயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண் பயணியை ரெயில்வே பாதுகாப்பு படையில் பணியாற்றி வரும் பெண் போலீஸ் காப்பாற்றினார்.
2. கேரளாவில் புதிதாக 8,733 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 118 பேர் பலி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,733 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. புதுச்சேரியில் இன்று 43 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
புதுச்சேரியில் தற்போது 454 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4. தமிழகத்தில் இன்று 1,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் தற்போது 14,058 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5. கேரளாவில் இன்று 11,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் தற்போது 82,738 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.