தேசிய செய்திகள்

புதிய மாடல் ஐபோன் 13 இந்தியாவில் விற்பனை தொடக்கம் + "||" + New model iPhone 13 goes on sale in India

புதிய மாடல் ஐபோன் 13 இந்தியாவில் விற்பனை தொடக்கம்

புதிய மாடல் ஐபோன் 13  இந்தியாவில் விற்பனை தொடக்கம்
புதிய மாடல் ஐபோன் 13 விற்பனை இந்தியாவில் இன்று முதல் தொடங்கியது
புதுடெல்லி

கலிபோர்னியா மாகாணம் குபெர்டினா நகரத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஐபோன் நிறுவனம், சமீபத்தில் செப்டம்பர் 14 அன்று நடைபெற்ற அந்த நிறுவனத்தின்  கலிபோர்னியா ஸ்ட்ரீமிங்  என்ற நிகழ்ச்சியின் போது ஐபோன் 13  மொபைலை அறிமுகப்படுத்தியது.

 உலகம் முழுவதும் அதன் விற்பனை தொடங்கியுள்ள நிலையில் இன்று முதல் இந்தியாவிலும் புதிய மாடல் ஐபோன் 13 தொடர் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தியாவில் ஐபோன் 13 மினி மாடல்  ரூ. 69,900 விலையில் தொடங்குகிறது. மேலும், ஐபோன் 13 பிரோ மேக்ஸ் ரூ. 1,79,900 வரையிலும் விற்பனைக்கு வருகிறது.

புதிய மாடல் ஐபோனை வாங்க விரும்புவர்களுக்காக பழைய மாடலை பரிமாற்றிக்கொள்ளும் எக்ஸ்சேன்ஞ் வசதியும் ஐபோன் நிறுவனம் வழங்குகிறது.  மேலும் ஐபோன் மட்டுமில்லாமல் உங்களுடைய பழைய ஆண்ட்ராய்டு போனையும் பரிமாற்றிக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இருப்பினும், ஐபோன் எக்ஸ்சேன்ஞ் செய்யும் பொழுது அதிகபட்ச தள்ளுபடி பெறமுடியும்.