தேசிய செய்திகள்

டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை + "||" + Delhi: Shots fired at Rohini court premises, at least three injured. Details awaited.

டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை

டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை
டெல்லி ரோஹினி பகுதியில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உள்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,

டெல்லி ரோஹினி பகுதியில் உள்ள  கீழமை கோர்ட்டில் இன்று வழக்கமான பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது வழக்கு விசாரணைக்கு  பிரபல  ரவுடி  ஜிதேந்தர் கோகி கோர்ட்டில் ஆஜரானார். அப்போது மர்மநபர்கள் திடீரென கோர்ட்டு வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

 இந்த துப்பாக்கிச்சூட்டில் ரவுடி ஜிதேந்தர் கோகி  உயிரிழந்தார். வழக்கறிஞர்கள் உடையில் வந்திருந்த 2 பேர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரவுடி ஜிதேந்தர் கோகி உயிரிழந்துள்ளர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரவுடிகள் மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.  

கோர்ட்டு  வளாகத்தில் நடந்த இந்த  துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோர்ட்டு  வளாகத்தில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.