தேசிய செய்திகள்

தலைநகர் டெல்லியில் இன்று கொரோனா உயிரிழப்பு இல்லை... + "||" + Delhi reports zero Covid deaths in last 24 hours

தலைநகர் டெல்லியில் இன்று கொரோனா உயிரிழப்பு இல்லை...

தலைநகர் டெல்லியில் இன்று கொரோனா உயிரிழப்பு இல்லை...
தலைநகர் டெல்லியில் இன்று 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 38 ஆயிரத்து 658 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 391 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 66 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், டெல்லியில் கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 14 லட்சத்து 13 ஆயிரத்து 182 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை கொரோனா பாதிப்பால் டெல்லியில் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால், டெல்லியில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 85 என்ற அளவில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷியாவில் புதிய உச்சமடைந்த கொரோனா உயிரிழப்பு...
ரஷியாவில் நேற்று ஒரேநாளில் புதிய உச்சமாக 973 பேர் உயிரிழந்தனர்.
2. உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23.94 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23.94 கோடியாக அதிகரித்துள்ளது.
3. மராட்டியத்தில் இன்று 2,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தில் இன்று 2,069 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
4. தமிழ்நாட்டில் இன்று 1,289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் இன்று 1,289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கர்நாடகாவில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.