தேசிய செய்திகள்

புதுச்சேரியில் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி; 956 பேருக்கு சிகிச்சை + "||" + Corona exposure confirmed for 94 in Pondicherry; Treatment for 956 people

புதுச்சேரியில் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி; 956 பேருக்கு சிகிச்சை

புதுச்சேரியில் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி; 956 பேருக்கு சிகிச்சை
புதுச்சேரியில் புதிதாக 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று வெளியிட்ட தகவலில், புதுச்சேரியில் 4,836 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-65, காரைக்கால்- 25, மாஹி- 4 பேர் என மொத்தம் 94 பேருக்கு (1.94 சதவீதம்) கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 122 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 834 பேரும் என 956 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

புதுச்சேரியில் புதிதாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,834 ஆகவும், இறப்பு விகிதம் 1.46 சதவீதமாகவும் உள்ளது. புதிதாக 107 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 130 (97.78 சதவீதம்) ஆக உள்ளது.  இதுவரை 9 லட்சத்து 51 ஆயிரத்து 267 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கொரோனா பாதிப்பு; இன்று 156 ஆக உயர்வு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 156 ஆக உயர்ந்து உள்ளது.
2. ரஷ்யாவில் 33,740 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி
ரஷ்யாவில் 33,740 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
3. சென்னையில் கொரோனா பாதிப்பு 150 ஆக குறைவு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 150 ஆக குறைந்து உள்ளது.
4. 'எனக்கும் கொரோனா' இருமிக்கொண்டே வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை
தடுப்பூசி போட மாட்டேன் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை நம்புவதாகவும் அது தன்னை மீட்க உதவும் என்றும் நடிகை கூறி உள்ளார்.
5. மக்களே எச்சரிக்கை..! கொரோனா வேகமாகப் பரவ வாய்ப்பு..! - நிதி ஆயோக்
கொரோனா அழிந்துவிட்டது என்று கூறிவிட முடியாது. ஏனெனில், பல நாடுகளில் கொரோனா தொற்று பல அலைகளாகத் தொடர்ந்து தாக்கி வருவதைக் காண முடிகிறது.