‘சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும்’ - மு.க.ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்


‘சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும்’ - மு.க.ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்
x
தினத்தந்தி 25 Sep 2021 7:46 AM GMT (Updated: 25 Sep 2021 7:46 AM GMT)

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதி உள்ளார்.

பாட்னா, 

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு முனைகளில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் திட்டம் இல்லை என மத்திய அரசு ஏற்கனவே கூறியிருந்தது. எனினும் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவு அளிக்கக் கோரி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட, பா.ஜனதா இல்லாத 33 கட்சித் தலைவர்களுக்கு  பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் அவசர கடிதம் எழுதி உள்ளார்.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக, மாநில கட்சிகளை ஒன்றுதிரண்டும் வகையில் எழுதியுள்ள அந்த கடிதத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த மத்திய பா.ஜனதா அரசின் நிலைப்பாட்டை விமர்சித்தும், பா.ஜனதா அரசுக்கு எதிரான அவைரும் கைகோர்க்க வேண்டும் என்றும் அதில் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். 



Next Story