தேசிய செய்திகள்

காதலியுடனான உல்லாச வீடியோவை வைத்து ரூ.10 லட்சம் கேட்டு நண்பனை மிரட்டிய நண்பன் + "||" + Man arrested for threatening friend with Rs 10 lakh for having fun video with girlfriend

காதலியுடனான உல்லாச வீடியோவை வைத்து ரூ.10 லட்சம் கேட்டு நண்பனை மிரட்டிய நண்பன்

காதலியுடனான உல்லாச வீடியோவை வைத்து ரூ.10 லட்சம் கேட்டு நண்பனை மிரட்டிய நண்பன்
டெல்லியில் காதலியுடன் இருந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் கேட்டு நண்பனை மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி,

டெல்லியில் வசித்து வரும் 30 வயது வாலிபர் பூங்கொத்துகள் அடங்கிய கவர் ஒன்றை நேற்று காலை பெற்றுள்ளார்.  அந்த கவரில் கடிதம் மற்றும் பென் டிரைவ் ஒன்றும் இருந்துள்ளது.

அந்த பென் டிரைவில், வாலிபர் அவரது காதலியுடன் தனிமையில் இருக்கும் பாலியல் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று இருந்துள்ளது.  அந்த கடிதத்தில், ரூ.10 லட்சம் கேட்டு நபர் ஒருவர் மிரட்டலும் விடுத்து உள்ளார்.  பணம் கொடுக்கவில்லை எனில், வீடியோ இன்று காலை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்துள்ளது.

இதுபற்றி வாலிபர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.  தீவிர விசாரணை நடத்தி 31 வயதுடைய சமீர் ஜோரி என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.  அவர், வாலிபரின் 7 ஆண்டுகால நண்பர் ஆவார்.

ஜோரியிடம் இருந்து வீடியோ, மேக்புக், பென்டிரைவ் மற்றும் கார் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  வாலிபர் தனது லேப்டாப்பை சரியாக ஆப் செய்யாமல் சென்றுள்ளார்.  இதனை பயன்படுத்தி ஜோரி தகவலை எடுத்துள்ளார்.

ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த ஜோரிக்கு பணம் தேவைப்பட்டு உள்ளது.  இதனால், அந்த வீடியோவை கொண்டு மிரட்டல் விடுத்து உள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கவனத்தை திசை திருப்பி வயதானவர்களிடம் பணம்-நகை பறிப்பு
சென்னையில் வயதானவர்களிடம் பணம், நகை பறிக்கும் குற்றத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
2. வாடிக்கையாளர்களின் ஆவணங்களை திருடி வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி மோசடி: 2 பேர் கைது
சென்னையில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் ஷோரூம்களில் பொருட்களை தவணை முறையில் வாங்க, வாடிக்கையாளர்களுக்கு தனியார் பைனான்ஸ் நிறுவனம் கடனுதவி கொடுத்து வருகிறது.
3. காஷ்மீரில் என்.ஐ.ஏ. சோதனை; 70 இளைஞர்கள் கைது
காஷ்மீரில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நடத்திய சோதனையில் 70 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
4. டெல்லி போலீசார் 2 பேர் கைது; சி பி ஐ அதிரடி
டெல்லி போலீசார் 2 பேர் லஞ்சம் வாங்கியதற்காக சி பி ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5. திருவள்ளூரில் குட்கா பொருட்கள் விற்ற வாலிபர் கைது
திருவள்ளூரில் குட்கா பொருட்கள் விற்ற வாலிபர் கைது.