திருப்பதி கோவிலில் 26 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை


திருப்பதி கோவிலில் 26 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை
x
தினத்தந்தி 25 Sep 2021 6:59 PM GMT (Updated: 25 Sep 2021 6:59 PM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் உண்டியல் வருமானம் ரூ.2 கோடியை தாண்டியது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இலவச தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் சித்தூர் மாவட்ட பக்தர்கள் மட்டும் ஒரு நாளைக்கு 2 ஆயிரம்பேர் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது வெளி மாநில பக்தர்களுக்கும் இலவச தரிசன அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 26 ஆயிரத்து 249 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அன்று 12 ஆயிரத்து 944 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் வருமானமாக ரூ.2 கோடியே 15 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story