கர்நாடகாவில் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளுக்கு அனுமதி!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 Sep 2021 3:22 AM GMT (Updated: 26 Sep 2021 3:22 AM GMT)

கர்நாடகாவில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 100 சதவீத இருக்கையுடன் திரையரங்கம் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா, 

கர்நாடக மாநில‌த்தில் பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 50 சதவீத மாணவர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. தொற்று குறைந்ததை தொடர்ந்து திரையரங்கங்கள், கேளிக்கை விடுதிகள், மதுபான விடுதிகளும் 50 சதவீத ஆட்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. 

இந்நிலையில் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்கங்கள் அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு திரைத்துறையினரும் திரையரங்க உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்தனர். அதன்படி வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் கொரோனா பாதிப்பு 1 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் உள்ள திரையரங்கங்கள் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்தலாம் என்றும் 1 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கேளிக்கை விடுதிகள், மதுபான விடுதிகள், உணவகங்கள், சொகுசு விடுதிகள், திருமண மண்டபங்கள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகளில் 100 சதவீத குழந்தைகளை அமர வைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story