தேசிய செய்திகள்

பிளிப்கார்ட்டின் மார்க்யூ எம்3 ஸ்மார்ட் போன் இந்தியாவில் வெளியாகிறது + "||" + Flipkart's Marquee M3 smartphone launched in India

பிளிப்கார்ட்டின் மார்க்யூ எம்3 ஸ்மார்ட் போன் இந்தியாவில் வெளியாகிறது

பிளிப்கார்ட்டின் மார்க்யூ எம்3 ஸ்மார்ட் போன் இந்தியாவில் வெளியாகிறது
ரூ.7,999 க்கு அதிக வசதிகளுடன் ஸ்மார்ட் போன், பிளிப்கார்ட்டின் மார்க்யூ நிறுவனம் அறிமுகம் செய்கிறது.
புதுடெல்லி,

பிளிப்கார்ட் நிறுவனம்  டிவி, குளிர்சாதன பெட்டி, ஏசி, ஃபீச்சர் போன் ஆகியவற்றை விற்பனை செய்து வரும் நிலையில்  தற்போது மார்க்யூ எம்3 மூலம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் தயாரிப்பிலும் களமிறங்குகிறது.

குறைந்த விலையில், 5,000 எம்ஏஎச் பேட்டரி, இரட்டை பின்புற கேமராக்கள், ரிவர்ஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் என பல புதிய அம்சங்களுடன் வருகிறது.

இது தற்போது ஃப்ளிப்கார்ட்டில் சிங்கிள்  ஸ்டோரேஜ் ஆப்சனில் பட்டியலிடப்பட்டுள்ளது. அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கும் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது இந்த  ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

13 மெகா பிக்ஸல் பின்புற கேமரா, 6.8 இன்ச் ஸ்கிரீன், இரட்டை சிம், 4 ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 4.2, வைஃபை, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5 மிமீ ஜாக் மற்றும் ஜிபிஎஸ் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

தொடக்க விலை ரூ .6,299 ஆக உள்ளது. விரைவில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5A, ஐடெல் A26, ரியல்மி  C11 2021, போகோ C3 மற்றும் மைக்ரோமேக்ஸ் இன் 2b ஆகியவற்றுடன் போட்டியிட தயாராக உள்ளது.