உத்தரபிரதேசத்தில் வகுப்பறையில் நடனமாடிய 5 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

உத்தரபிரதேசத்தில் வகுப்பறையில் நடனமாடிய 5 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 27 Sep 2021 12:54 AM GMT (Updated: 27 Sep 2021 12:54 AM GMT)

உத்தரபிரதேச மாநிலத்தில், மாணவர்கள் இல்லாத வகுப்பறையில் 5 ஆசிரியர்கள் சினிமா பாடல்களுக்கு நடனமாடும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவியது.

ஆக்ரா, 

உத்தரபிரதேச மாநிலத்தில், மாணவர்கள் இல்லாத வகுப்பறையில் 5 ஆசிரியர்கள் சினிமா பாடல்களுக்கு நடனமாடும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவியது.

அதுதொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது, ஆக்ரா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த மார்ச் மாதம் ஆசிரியர்களின் அந்த ‘நடனம்’ இடம் பெற்றது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட 5 உதவி ஆசிரியர்களும், அப்பள்ளியின் தலைமை ஆசிரியரும் விளக்கம் அளிக்கும்படி அடிப்படை கல்வித்துறை உத்தரவிட்டது.

அதற்கு 4 ஆசிரியர்கள் மட்டும் விளக்கம் அளித்தனர். அவர்கள் அளித்த பதில் திருப்தி தரவில்லை, வகுப்பில் நடனம் ஆடியது ஆசிரியப்பணியின் நெறியை மீறிய செயல் என்று கூறி, 5 ஆசிரியர்களையும் கல்வித்துறை நேற்றுமுன்தினம் பணியிடை நீக்கம் செய்தது.

Next Story