தேசிய செய்திகள்

இந்திய இராணுவ அதிகாரி புதிய கின்னஸ் உலக சாதனை! + "||" + Indian Army Officer sets new Guinness World Record for Fastest Solo Cycling from Leh to Manali

இந்திய இராணுவ அதிகாரி புதிய கின்னஸ் உலக சாதனை!

இந்திய இராணுவ அதிகாரி புதிய கின்னஸ் உலக சாதனை!
இந்திய இராணுவ அதிகாரி 'வேகமாக தனி சைக்கிள் ஓட்டுதல் (ஆண்கள்)' பிரிவில் புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
லடாக்,

இந்திய இராணுவ அதிகாரி  ஸ்ரீராம் சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு யூனியன் பிரதேசமான லடாக்கின் லே மாவட்டத்தில் இருந்து இமாச்சலப்பிரதேசத்திலுள்ள மணாலி வரை உள்ள 472 கி.மீ தூரத்தை  வெறும் 34 மணிநேரம் 54 நிமிடங்களில் கடந்து  'வேகமாக தனி சைக்கிள் ஓட்டுதல் (ஆண்கள்)' பிரிவில் புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் என்று பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

கடினமான வானிலை சூழலின்  ஐந்து முக்கிய நிலைகளை கடந்து முன்னேறிய அவர் 34 மணிநேரம் 54 நிமிடங்களில் இலக்கை வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்த நிகழ்வு 'ஸ்வர்ணிம் விஜய் வர்ஷ்' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் 195-வது கன்னர் தினத்தை குறிக்கிறது என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதன் 50-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்தியா ‘ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்’ கொண்டாடுகிறது.