தேசிய செய்திகள்

கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆட்சி நடத்தி வருகிறது; சித்தராமையா குற்றச்சாட்டு + "||" + RSS governs Karnataka; Chittaramaya charge

கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆட்சி நடத்தி வருகிறது; சித்தராமையா குற்றச்சாட்டு

கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆட்சி நடத்தி வருகிறது; சித்தராமையா குற்றச்சாட்டு
கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆட்சி நடத்தி வருகிறது என எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.
பெங்களூரு,

கர்நாடகாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது.  இந்த நிலையில், காந்தி நகர் சட்டசபை தொகுதியில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு ஏழை மக்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினார்.

இதன்பின்பு அவர் பேசும்போது, பா.ஜ.க. பொய்களின் தொழிற்சாலை.  அவர்கள் பொய்களை மட்டுமே உற்பத்தி செய்து, அவற்றை சந்தைப்படுத்தி வருகின்றனர்.  பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் தலீபான் போன்றவர்கள்.  மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என பேசியுள்ளார். 

கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முகமூடியை அணிந்துள்ளார்.  ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் தங்களை தேசப்பற்றாளர்கள் என கூறி கொள்கின்றனர்.  அப்படியெனில், இந்திய சுதந்திரத்திற்காக உயிரிழந்த ஒரு தலைவரின் பெயரை அவர்கள் குறிப்பிட வேண்டும் என கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பொது முடக்கத்துக்கு பிறகு இந்தியாவில் 1½ லட்சம் பேர் தற்கொலை கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
கொரோனா பொது முடக்கத்துக்கு பிறகு இந்தியாவில் 1½ லட்சம் பேர் தற்கொலை கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு.
2. தி.மு.க.வில் சேரச்சொல்லி அ.தி.மு.க. நிர்வாகிகளை மிரட்டுகின்றனர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
கரூர் மாவட்டத்தில் தி.மு.க.வில் சேரச்சொல்லி அ.தி.மு.க. நிர்வாகிகளை மிரட்டுகின்றனர் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
3. ஜெயலலிதா திட்டங்களுக்கு மூடுவிழா ஜெயக்குமார் குற்றச்சாட்டு
ஜெயலலிதா திட்டங்களை மூடுவிழா செய்யும் நிலையை உருவாக்கி உள்ளனர் என்று ஜெயக்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.
4. வேளாண் சட்டங்கள் ரத்து சந்தர்ப்பவாத செயல்; கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு
புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவது சந்தர்ப்பவாத செயல் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டாக தெரிவித்துள்ளார்.
5. அம்மா மினி கிளினிக்குக்கு ஒரு நர்சு கூட நியமிக்கவில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
அ.தி.மு.க. ஆட்சியில் பெயர் பலகை மட்டுமே வைக்கப்பட்டதாகவும், அம்மா மினி கிளினிக்குக்கு ஒரு நர்சு கூட நியமிக்கவில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டி உள்ளார்.