தேசிய செய்திகள்

டெல்லியில் மேலும் 32 பேருக்கு கொரோனா + "||" + Delhi records 32 COVID-19 cases; positivity rate 0.06 per cent

டெல்லியில் மேலும் 32 பேருக்கு கொரோனா

டெல்லியில் மேலும் 32 பேருக்கு கொரோனா
டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 0.06 சதவிகிதமாக உள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 32 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. மாநிலத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 0.06 ஆக உள்ளது. நடப்பு மாதத்தில்  கொரோனா தொற்றுக்கு டெல்லியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

டெல்லியில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 38 ஆயிரத்து 746 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 14.13 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25,085- ஆக உள்ளது.

டெல்லியில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 366- ஆக உள்ளது. டெல்லியில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 93 ஆக உள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 50,367 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் மேலும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 36,339 பேருக்கு தொற்று
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,339 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று அதிகரிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது.
3. இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 49,139 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 49,139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ரஷ்யாவில் புதிதாக 34,073 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,028 பேர் பலி
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,073 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: ரஷ்யாவில் ஒருவாரத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிப்பு
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ரஷிய தலைநகர் மாஸ்கோவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.