தேசிய செய்திகள்

கேரளாவில் குறைந்து வரும் கொரோனா; 11,699 பேருக்கு பாதிப்பு உறுதி + "||" + Declining corona in Kerala; 11,699 people were confirmed vulnerable

கேரளாவில் குறைந்து வரும் கொரோனா; 11,699 பேருக்கு பாதிப்பு உறுதி

கேரளாவில் குறைந்து வரும் கொரோனா; 11,699 பேருக்கு பாதிப்பு உறுதி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,699 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்,


நாடு முழுவதும் கொரோனா 2வது அலையில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன.  சமீப நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து காணப்படுகின்றன.  எனினும், கேரளாவில் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே காணப்பட்டன.

இந்த சூழலில், கேரள சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,699 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்திற்கும் கூடுதலாக இருந்த பாதிப்புகள் தொடர்ச்சியாக குறைந்து வந்து 12 ஆயிரத்திற்கும் கீழ் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஒரே நாளில் 17,763 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 44,59,193 ஆக உயர்ந்து உள்ளது.  1,57,158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  58 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால், மொத்த உயிரிழப்பு 24,661 ஆக உயர்ந்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு பண்டிகை காலங்களில் அதிகரிக்க கூடும்; மருத்துவர் எச்சரிக்கை
கொரோனா பாதிப்பு பண்டிகை காலங்களில் அதிகரிக்க கூடும் என பொதுமக்களுக்கு மருத்துவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
2. நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. சென்னையில் கொரோனா பாதிப்பு; இன்று 156 ஆக உயர்வு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 156 ஆக உயர்ந்து உள்ளது.
4. ரஷ்யாவில் 33,740 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி
ரஷ்யாவில் 33,740 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
5. சென்னையில் கொரோனா பாதிப்பு 150 ஆக குறைவு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 150 ஆக குறைந்து உள்ளது.