தேசிய செய்திகள்

போராடும் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; காங்கிரஸ் வலியுறுத்தல் + "||" + Cong asks PM Modi to talk to agitating farmers Cong asks PM Modi to talk to agitating farmers

போராடும் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; காங்கிரஸ் வலியுறுத்தல்

போராடும் விவசாயிகளுடன்  பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; காங்கிரஸ் வலியுறுத்தல்
விவசாயிகளுடன் நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும், இல்லையெனில் நமது நாட்டின் எதிர்காலம் இருளில் மூழ்கும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

மத்திய அரசு விவசாயிகள் தொடர்பான 3 வேளாண்மை சட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியது. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாக கூறி அவற்றை வாபஸ் பெற வற்புறுத்தி விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினார்கள்.

இந்த தொடர் போராட்டம் ஓராண்டை எட்டியுள்ள நிலையில் இன்று விவசாயிகள் பாரத்பந்த் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்தனர். 40 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு சார்பில் பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

காலை 6 மணியில் இருந்து மாலை 4 மணிவரை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் போராட்டத்தால் ரெயில், சாலை போக்குவரத்து வட இந்தியாவில் பல இடங்களில் பாதிக்கப்பட்டது. டெல்லியில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாகியது. 

இதனால் டெல்லி நகரம் திணறியது.  விவசாயிகள் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதாக விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாய்த் கூறினார்.  இந்த நிலையில், போராடும் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் கட்சியின் தலைமை என்பது ஒரு தனிநபரின் தெய்வீக உரிமை அல்ல - பிரசாந்த் கிஷோர்
காங்கிரஸ் கட்சியின் தலைமை என்பது ஒரு தனிநபரின் தெய்வீக உரிமை அல்ல என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
2. நாம் இயற்கையை பாதுகாக்கும் போது இயற்கையும் நம்மை பாதுகாக்கும்- பிரதமர் மோடி
நம்மை சுற்றியுள்ள இயற்கை வளங்களை நாம் பாதுகாப்போம் அதன் பிரதிபலனாக இயற்கை நம்மை பாதுகாக்கும் என பிரதமர் மோடி பேசினார்.
3. வரும் புதன்கிழமை மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற ஒப்புதல் பெறப்படும் எனத்தகவல்கள் கூறுகின்றன.
4. விவசாய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் - ராகேஷ் டிகாயிட்
நாடாளுமன்றத்தில் விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் நாளுக்காக காத்திருப்போம் என்று விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகாயிட் டுவீட் செய்துள்ளார்
5. மோடி அரசுக்கு தேசத்தை காக்கும் திறன் இல்லை- ராகுல் காந்தி பாய்ச்சல்
மணிப்பூர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி, மனைவி, மகன், 4 வீரர்கள் என 7 பேர் பலியாகினர்.