டெல்லியில் இடியுடன் கூடிய மழை; இந்திய வானிலை ஆய்வு மையம்


டெல்லியில் இடியுடன் கூடிய மழை; இந்திய வானிலை ஆய்வு மையம்
x

டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மித அளவிலான மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


புதுடெல்லி,

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல்  மித அளவிலான மழை இன்று பெய்ய கூடும் என தெரிவித்து உள்ளது.

டெல்லி,  அலிகஞ்ச், காஸ்கஞ்ச், சிக்கந்தர் ராவ், இக்லாஸ் (உத்தர பிரதேசம்), ஹோடல், குருகிராம், திஜாரா ஆகிய பகுதிகளில் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்ய கூடும் என்றும் தெரிவித்து உள்ளது.

கடந்த 77 ஆண்டுகளில் இல்லாத வகையில் 390 மி.மீ. மழை டெல்லியில் பெய்துள்ளது.  இதேபோன்று 121 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் டெல்லியில், 24 மணிநேரத்தில் மிக அதிக அளவில் மழை பெய்துள்ளது என்றும் இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்து இருந்தது.


Next Story