கர்நாடகாவில் மேலும் 504 பேருக்கு கொரோனா தொற்று


கர்நாடகாவில் மேலும் 504 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 27 Sep 2021 4:15 PM GMT (Updated: 27 Sep 2021 4:15 PM GMT)

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 504 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 504 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 29 லட்சத்து 73 ஆயிரத்து 899- ஆக உயர்ந்துள்ளது. 

அதேபோல், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37, 746 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 893-பேர் குணம் அடைந்ததையடுத்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 29 லட்சத்து 23 ஆயிரத்து 320- ஆக உயர்ந்துள்ளது.  

தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 12,804- ஆக உள்ளது.  கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 0.48 சதவிகிதமாக உள்ளது. உயிரிழப்பு விகிதம் 3.96 சதவிகிதமாக உள்ளது.  தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1 லட்சத்து 03 ஆயிரத்து 800 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,72,99,938- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story