ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு: மத்திய நிதியமைச்சகம்


ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு: மத்திய நிதியமைச்சகம்
x
தினத்தந்தி 27 Sep 2021 6:31 PM GMT (Updated: 27 Sep 2021 6:31 PM GMT)

அடுத்த 6 மாதங்களில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்க உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.

மொத்த கடன்ரூ.12.05 லட்சம் கோடி
நடப்பு நிதியாண்டில் ரூ.12.05 லட்சம் கோடி மொத்த கடன் வாங்க வேண்டியிருக்கும் என 2021-22-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டு இருந்தது. இதில் ரூ.7.02 லட்சம் கோடி (60 சதவீதம்) நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் திட்டமிடப்பட்டது.அதன்படி பத்திரங்கள் வெளியீடு மூலம் நிதியாண்டின் முதல் பாதியில் ரூ.7.02 லட்சம் கோடி பெறப்பட்டது. எனினும் நிகர கடன் 9.37 லட்சம் கோடியாக இருந்தது.எனவே 2-வது பாதியில் மீதமுள்ள ரூ.5.03 லட்சம் கோடி கடன் வாங்க இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

பொருளாதாரம் பாதிப்பு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான வருவாய் இடைவெளியை போக்குவதற்காக நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் அரசாங்கம் ரூ.5.03 லட்சம் கோடி கடன் வாங்கப்படுவதாக அமைச்சகம் கூறியுள்ளது. இதைப்போல மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி இழப்பீட்டுக்கான நிதியை வெளியிடுவதற்கான காரணிகளும் இதில் அடங்கும் என நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மொத்த கடனில், முந்தைய கடன்களை திருப்பிச் செலுத்துவதும் அடங்கும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story