கணவருடன் ஏற்பட்ட சண்டையால் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் - காப்பாற்றிய நிர்பயா பிரிவு


கணவருடன் ஏற்பட்ட சண்டையால் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் - காப்பாற்றிய நிர்பயா பிரிவு
x
தினத்தந்தி 27 Sep 2021 11:03 PM GMT (Updated: 27 Sep 2021 11:03 PM GMT)

கணவருடன் ஏற்பட்ட சண்டையால் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை நிர்யபா போலீஸ் பிரிவு காப்பாற்றியுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் போலீஸ் துறையில் நிர்பயா பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவு பெண்களுக்கு எதிராக குற்றங்களை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், மும்பையின் மதா பகுதியில் உள்ள கடற்கரையில் நேற்று இரவு ஒரு பெண் அழுதுகொண்டே செல்வதாக போலீசாருக்கு உள்ளூர் வாசிகள் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, துரிதமாக செயல்பட்ட போலீசின் நிர்பயா பிரிவு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதற்குள் அந்த பெண் கடலில் குதித்துள்ளார். உடனடியாக, கடலில் குதித்த அப்பெண்ணை நிர்பயா பிரிவு போலீசார் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.

அதன்பின்னர் தற்கொலைக்கு முயன்ற அப்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் 30 வயதான அப்பெண் நேற்று இரவு கணவருடன் ஏற்பட்ட சண்டையால் அவரையும், தனது 4 வயது குழந்தையையும் வீட்டில் பூட்டை வைத்துவிட்டு தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கடற்கரைக்கு வந்ததாகவும் கூறினார்.

இதனை தொடர்ந்து அப்பெண்ணின் கணவரை அழைத்த போலீசார் இருவரையும் சமாதானம் செய்துவைத்தனர். அதன்பின்னர் அப்பெண் தனது கணவருடன் சமாதானமாகி வீட்டிற்கு சென்றார்.     

Next Story