தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் + "||" + By election for 2 Assembly constituencies in Karnataka

கர்நாடகாவில் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

கர்நாடகாவில் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
கர்நாடக காலியாக உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
ஐதராபாத்,

கர்நாடகாவில் உள்ள சிந்த்கி மற்றும் ஹங்கல் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சிந்த்கி தொகுதியின் ஜனதாதள கட்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. மங்குலி மற்றும் ஹங்கல் தொகுதியின் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் சி.எம். உதைசி ஆகிய இருவரும் உயிரிழந்ததையடுத்து, இந்த 2 பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

தேர்தல் அறிவிப்பு வரும் அக்டோபர் 1-ந் தேதி தேர்தல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அக்டோபர் 8-ம் தேதி கடைசி நாளாகும். அக்டோபர் 13 -ம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். அதனை தொடர்ந்து நவம்பர் 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் புதிய வகை ஏ.ஒய் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு
பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யாவில் வேகமாகப் பரவி வரும் புதிய வகை ஏ.ஒய்.4.2 ரக கொரோனா வைரஸ் கர்நாடாவிலும் பரவியுள்ளது.
2. 45 வயதானவரை திருமணம் செய்த இளம்பெண்
துமகூருவில் 45 வயதானவரை 25 வயது இளம்பெண் திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
3. கர்நாடகத்தில் போலீஸ் நிலையங்களை காவி மயமாக்க அரசு முயற்சி- டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
கர்நாடகத்தில் போலீஸ் நிலையங்களை காவி மயமாக்க அரசு முயற்சி செய்வதாக டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
4. கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டத்தில் பாதிரியார் கைது
கர்நாடக மாநிலம் உப்பள்ளியில் மதமாற்ற தடை சட்டத்தில் பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
5. கர்நாடகாவில் தொடக்கப்பள்ளிகள் திறப்பு: முதல்வர் அறிவிப்பு
கர்நாடகாவில் தொடக்கப்பள்ளிகள் வரும் அக்டோபர் 25 முதல் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.