தேசிய செய்திகள்

இரண்டு நாள் பயணமாக பஞ்சாப் செல்கிறார் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் + "||" + Kejriwal to make 'big' announcements during 2 day trip to Punjab

இரண்டு நாள் பயணமாக பஞ்சாப் செல்கிறார் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்

இரண்டு நாள் பயணமாக பஞ்சாப் செல்கிறார் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாபிற்கு இரண்டு நாள் பயணம் செல்கிறார். அதன் பின்பு அவர் பெரிய அறிவிப்புகளை வெளியிடுவார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
டெல்லி

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டு நாள் பஞ்சாப் சுற்றுப்பயணம் செல்கிறார். அவர் நாளை லூதியானா சென்று வணிகர்களை சந்திப்பார். அதன் பின்பு அரவிந்த் கெஜ்ரிவால் 30 -ந்தேதி அன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் என ஆம் ஆத்மி கட்சி அதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

ஆம் ஆத்மியின் பஞ்சாப் இணை பொறுப்பாளர் ராகவ் சத்தாவும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாபிற்கு இரண்டு நாள் பயணமாக, நாளை வருகிறார், பெரிய அறிவிப்புகளுக்காக காத்திருங்கள்" என டுவிட் செய்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32 பேருக்கு கொரோனா
டெல்லியில் தற்போது 320 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2. டெல்லியில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது
டெல்லியில் இன்று காலை முதல் பெய்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
3. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28 பேருக்கு கொரோனா
டெல்லியில் தற்போது 337 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4. டெல்லியில் இளைஞர் காங்கிரசார் டார்ச் லைட் ஏந்தி பேரணி
லகிம்பூர் வன்முறையை கண்டித்து டெல்லியில் இளைஞர் காங்கிரசார் டார்ச் லைட் ஏந்தி பேரணியாக சென்றனர்.
5. கிரெடிட் கார்டு மோசடி; 90 ஆயிரம் பறிப்பு - 5 பேர் கைது
வங்கியில் பணியாற்றும் கஸ்டமர் கேர் பணியாளர்கள் போல் நடித்து பணம் பறித்த குற்றத்திற்காக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.