கேரளாவில் மேலும் 11,196- பேருக்கு கொரோனா தொற்று


கேரளாவில் மேலும் 11,196- பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 28 Sep 2021 1:15 PM GMT (Updated: 28 Sep 2021 1:15 PM GMT)

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,196- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,196- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பைக் கண்டறிய 96,346 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பாதிப்பு விகிதம்  11.6 சதவிகிதமாக உள்ளது.  கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 129- பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து 18,849 பேர் இன்று குணம் அடைந்துள்ளனர். 

கேரளாவில் இதுவரை  கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24,810- ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 46.41 லட்சமாக உயர்ந்துள்ளது. குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 44.78- ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் 1.49 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Next Story