தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு பலியானோரின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்குவோம் - ஒடிசா அரசு அறிவிப்பு + "||" + will provide Rs 50,000 each to the families of the victims in Corona - Odisha Government Announcement

கொரோனாவுக்கு பலியானோரின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்குவோம் - ஒடிசா அரசு அறிவிப்பு

கொரோனாவுக்கு பலியானோரின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்குவோம் - ஒடிசா அரசு அறிவிப்பு
கொரோனாவுக்கு பலியானோரின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்குவோம் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
புவனேஸ்வர், 

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு மாநில அரசுகள் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. இந்தநிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, இந்த நிதியுதவியை வழங்க உள்ளதாக ஒடிசா மாநில அரசு நேற்று அறிவித்தது. இதுகுறித்து மாநில மருத்துவ கல்வி இயக்குனரக தலைவர் மொகந்தி கூறியதாவது:-

மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இத்தொகை வழங்கப்படும். தற்கொலை செய்து கொண்ட, விபத்துகளில் இறந்த கொரோனா நோயாளிகளின் குடும்பத்தினரும் இந்த நிதியுதவி பெற தகுதியுடையவர்கள் ஆவர். கொரோனா உயிரிழப்புகளை மீண்டும் சரிபார்க்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒடிசாவில் கொரோனாவுக்கு இதுவரை 8 ஆயிரத்து 187 பேர் இறந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி விவகாரம்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகம்
கொரோனா தடுப்பூசி விவகாரம்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகம்.
2. புதிதாக 18 பேருக்கு கொரோனா
மதுரையில் நேற்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
3. மேலும் 3 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் - பிரதமர் மோடி
கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
5. அசைவ, மதுபிரியர்கள் வசதிக்காக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமைக்கு மாற்றம்
அசைவ, மதுபிரியர்கள் வசதிக்காக மெகா தடுப்பூசி முகாம் இனி சனிக்கிழமை நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.