ஜம்மு செல்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் - சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பின்னர் மேற்கொள்ளும் முதல் பயணம்


ஜம்மு செல்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் - சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பின்னர் மேற்கொள்ளும் முதல் பயணம்
x
தினத்தந்தி 28 Sep 2021 10:31 PM GMT (Updated: 28 Sep 2021 10:31 PM GMT)

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் 4 நாட்கள் பயணமாக நாளை ஜம்மு செல்கிறார்.

நாக்பூர்,

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் 4 நாட்கள் பயணமாக நாளை ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் செல்கிறார். 4 நாட்கள் பயணமாக ஜம்மு செல்லும் மோகன் பகவத் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 3 வரை ஜம்முவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோகன் பகவத் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தன்னார்வலர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடுகிறார். மேலும், இந்த சுற்றுப்பயணத்தின் போது ஜம்முவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மோகன் பகவத் விரிவுரையாற்றுகிறார்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஜம்முவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பதால் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. இதற்கு முன்னதாக மோகன் பகவத் 2016-ம் ஆண்டு ஜம்மு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story