தேசிய செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு + "||" + Petition in the Supreme Court seeking cancellation of NEET examination

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றது. இந்த சூழலில் உத்தர பிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் நீட் வினாத்தாள் வெளியானதாக செய்திகள் வெளியானது. 

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற (செப்டம்பர் 12ஆம் தேதி) நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, தேர்வு எழுதிய மாணவர்கள் சார்பில் சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், நீட் வினாத்தாளை பயிற்சி மையங்களில் முன்கூட்டியே வழங்கி முறைகேடு மற்றும் ஆள்மாறாட்டம் நடந்துள்ளது. இதனால் நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது. நீட் தேர்வு மையங்களில் பயோமெட்ரிக் சோதனை, ஜாமர் உள்ளிட்ட கருவிகள் பொருத்த உத்தரவிட வேண்டும் என்று அதில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘நீட்’ தேர்வில் கூடுதல் மதிப்பெண் கேட்ட மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
நீட் தேர்வில் கூடுதல் மதிப்பெண் கேட்ட மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
2. வரும் 29ந்தேதி வேளாண் சட்டங்கள் ரத்து வரைவு சட்ட மசோதா 2021 தாக்கல்
வேளாண் சட்டங்கள் ரத்து வரைவு சட்ட மசோதா 2021, வருகிற 29ந்தேதி குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
3. மோசமான வானிலையால் சீரடி விமானம் ரத்து சென்னையில் பயணிகள் வாக்குவாதம்
மோசமான வானிலையால் சீரடி செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான நிறுவன அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
4. 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல்
3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா 29-ந் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
5. ஆந்திராவில் வெள்ளப்பெருக்கு எதிரொலி: வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து
ஆந்திராவில் வெள்ளப்பெருக்கு எதிரொலி: வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு.