ஜார்க்கண்டிலிருந்து கோவாவுக்கு நேரடி ரயில்; இந்திய ரயில்வே அறிமுகம்


ஜார்க்கண்டிலிருந்து கோவாவுக்கு நேரடி ரயில்; இந்திய ரயில்வே அறிமுகம்
x
தினத்தந்தி 29 Sep 2021 8:21 AM GMT (Updated: 29 Sep 2021 8:21 AM GMT)

ஜார்க்கண்டிலிருந்து கோவாவுக்கு வாரம் ஒருமுறை செல்லும் ஜசிதிக்-வாஸ்கோ டா காமா எக்ஸ்பிரஸ் நேரடி ரயிலை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

ராஞ்சி
 
ஜார்கண்ட் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஜார்கண்ட்-கோவா நேரடி ரெயில் சேவையை ஜசிதிக்-வாஸ்கோ டா காமா எக்ஸ்பிரஸ் மூலம் நிறைவேற்றி இருக்கிறது, இந்திய ரெயில்வே. ஜார்கண்டில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கோவாவுக்கு வேலை தேடி அல்லது சுற்றுலா பயணமாக வருகிறார்கள். ஜார்க்கண்ட் மற்றும் கோவாவை இணைக்கும் நேரடி ரெயில் சேவை இதுவரையில் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில், ரெயில் எண் 06398, ஜசிதிக்-வாஸ்கோ டா காமா எக்ஸ்பிரஸ் என்ற ஜார்கண்ட்-கோவா நேரடி ரெயிலை ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னா கொடி அசைத்து நேற்று தொடங்கி வைத்தார். 

கோவா செல்லும் இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாநிலத்தின் தியோகர் மாவட்டத்தில் உள்ள ஜசிதக் நிலையத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கியது. புதிய ரெயிலை வரவேற்க ராஞ்சி ரெயில் நிலையத்தில் பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

ராஞ்சி  எம்.பி. சஞ்சய் சேத், ராஜ்யசபா எம்.பி மகேஷ் போத்தர், எம்.பி தீபக் பிரகாஷ், பா.ஜ.க. எம்.எல்.ஏ. பாபுலால் மராண்டி , சிபி சிங் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த ரெயிலை வரவேற்றனர். இரவு 8:55 மணிக்கு இந்த ரெயில் ராஞ்சி ரெயில் நிலையத்தை அடைந்தது.

போகாரோ, ரூர்கேலா, பிலாஸ்பூர் மற்றும் செகந்திராபாத் வழியாக கோவா செல்லும் இந்த ரெயில் வாரத்திற்கு ஒரு முறை இயக்கப்படும்.

Next Story