தேசிய செய்திகள்

பஞ்சாபில் ஒவ்வொரு காங்கிரஸ் தலைவரும் முதல்வராக விரும்புகின்றனர்- அரவிந்த கெஜ்ரிவால் + "||" + Punjab: Arvind Kejriwal promises free health services if voted to power in 2022

பஞ்சாபில் ஒவ்வொரு காங்கிரஸ் தலைவரும் முதல்வராக விரும்புகின்றனர்- அரவிந்த கெஜ்ரிவால்

பஞ்சாபில் ஒவ்வொரு காங்கிரஸ் தலைவரும் முதல்வராக விரும்புகின்றனர்- அரவிந்த கெஜ்ரிவால்
பஞ்சாபின் நிலைமை மோசமாக உள்ளது. ஒவ்வொரு காங்கிரஸ் தலைவரும் முதல் மந்திரியாக விரும்புகின்றனர் என அரவிந்த கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
சண்டிகர்: 

பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. அடுத்த 5 மாதங்களில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் உட்கட்சி பிரச்சினையால் ஆட்டம் கண்டுவருகிறது. இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் குதித்துள்ளது. 

இன்று பஞ்சாப் மாநிலம் சென்ற டெல்லி முதல் மந்திரியும்  ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் . 

அப்போது அவர் கூறியதாவது:-

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக மிகுந்த எதிர்பார்ப்புடன் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தனர்.

ஆட்சியை மறந்துவிட்டு காங்கிரஸ் கட்சியினர் அரசாங்கத்தை கேலி செய்கின்றனர். அதிகாரத்திற்காக மோசமான சண்டை நடக்கிறது. பஞ்சாபில் ஒவ்வொரு காங்கிரஸ்  தலைவரும் முதல் மந்திரியாக  விரும்புகின்றனர். பஞ்சாபின் நிலைமை மோசமாக உள்ளது.

ஆம் ஆத்மி கட்சி மட்டுமே மக்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறது. பஞ்சாபில் அடுத்ததாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கும். பஞ்சாபின் மின்சார பிரச்சினைக்கு தீர்வு காண்போம். நாங்கள் செய்ய முடியாததை வாக்குறுதியாக அளிப்பதில்லை.

அனைவருக்கும் சுகாதார அட்டை வழங்கப்படும். இதன்மூலம் மக்களுக்கு இலவச மற்றும் தரமான சுகாதாரத்தை அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவிக்கு காங்கிரஸ் நோட்டீஸ்
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவியான பாட்டியாலா தொகுதியின் எம்.பி. பிரனீத் கவுரின் “கட்சி விரோத நடவடிக்கைகளுக்கு” விளக்கம் கேட்டு காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
2. 'நாங்கள் தோழர்கள், காதலர்கள் அல்ல' அமரிந்தர் சிங் உடனான நட்பு குறித்து அரூசா ஆலம்
கேப்டன் அமரிந்தர் சிங்கின் நீண்டகால நண்பரும், பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளருமான அரூசா ஆலம், பஞ்சாபில் அரசியல் சர்ச்சையில் இழுக்கப்பட்டுள்ளார்.
3. பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் புதிய கட்சி குறித்து நாளை அறிவிப்பு...?
பஞ்சாப் முதல் மந்திரியாக இருந்த அமரிந்தர் சிங் செப்டம்பர் 18 அன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
4. அமரிந்தர் சிங் புதிய கட்சி தொடங்க திட்டம்..! பா.ஜ.க.வுடன் கூட்டணி...?
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஹரிஷ் ராவத் அமரிந்தர் சிங் பா.ஜ.க.விற்கு செல்ல விரும்பினால் போகலாம் என கூறி உள்ளார்.
5. பஞ்சாப் அரசியல் சூழ்நிலையும்...! ராகுல் காந்தி கேரள பயணமும்...!
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று காலை கேரளாவுக்கு சென்றுள்ளார். முன்னதாகவே, கோழிக்கோடு, மலப்புரத்திற்கு செல்ல ராகுல் காந்தி திட்டமிட்டிருந்தார்.