தேசிய செய்திகள்

பஞ்சாப்பை தொடர்ந்து... சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் கலாட்டா...? + "||" + Amid crisis in Punjab Congress, Chhattisgarh MLAs reach Delhi

பஞ்சாப்பை தொடர்ந்து... சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் கலாட்டா...?

பஞ்சாப்பை தொடர்ந்து... சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் கலாட்டா...?
பஞ்சாப்பை தொடர்ந்து... சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

புதுடெல்லி

பஞ்சாப் மாநில காங்கிரசில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் ஆளும் மற்றோர் மாநிலமான சத்தீஸ்கரிலும் உள்கட்சி மோதல் வலுத்துள்ளதாக கூறப்படுகிறது.

முதலமைச்சராக இருக்கும் பூபேஷ் பாகல் இரண்டரை ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், எஞ்சிய பதவிக்காலத்தை தமக்கு தர வேண்டும் என அமைச்சரும் அதிருப்தி தலைவருமான சிங் தியோ போர்க்கொடி தூக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே 15 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் டெல்லிக்கு சென்றுள்ளனர்.அவர்கள் காங்கிரஸ் மேலிடத்தை சந்தித்து முதலமைச்சருக்கு தங்களது ஆதரவை தெரிவிக்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 90 இடங்களை கொண்ட சட்டசபையில் காங்கிரசுக்கு 70 எம்எல்ஏக்கள் உள்ளனர்.இவர்களில் 60 பேரின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக முதல்மந்திரி  வட்டாரம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ், யாருடனும் கூட்டணி இல்லை: சித்தராமையா
மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ் யாருடனும் கூட்டணி அமைக்காது என்று சித்தராமையா திட்டவட்டமாக கூறினார்.
2. மும்பை தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து இருக்க வேண்டும்; மனிஷ் திவாரி விமர்சனம்
மும்பை தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து இருக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மனிஷ் திவாரி, புத்தகம் ஒன்றில் எழுதியுள்ளார்.
3. இந்திய பகுதிக்குள் சீனா உருவாக்கும் கிராமம்: மோடி மவுனம் சாதிப்பது ஏன்..? காங்கிரஸ் கண்டனம்
அருணாசலபிரதேசத்தில் சீனா உருவாக்கும் 2-வது கிராமம் தொடர்பாக மோடி மவுனம் சாதிப்பது ஏன் என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
4. காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் வீட்டிற்கு தீ வைப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான சல்மான் குர்ஷித் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
5. சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு- காங்கிரஸ் கண்டனம்
சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.