ராகுல், பிரியங்காவுக்கு துணை நிற்பேன்: சித்து


ராகுல், பிரியங்காவுக்கு துணை நிற்பேன்: சித்து
x
தினத்தந்தி 3 Oct 2021 3:24 AM GMT (Updated: 3 Oct 2021 3:24 AM GMT)

பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் வெடித்ததால் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் பதவி விலகினார். அவர் காங்கிரசில் இருந்தே விலக முடிவு செய்திருக்கும் நிலையில் பஞ்சாப்பில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவும், அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னியின் அரசில் நடந்த புதிய நியமனங்கள் மீதான அதிருப்தி காரணமாக அவர் பதவி விலகியதாக தெரிகிறது. எனினும் அவரது ராஜினாமாவை கட்சித்தலைமை இன்னும் ஏற்றுக்கொண்டதாக தகவல் இல்லை.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்வேன் என சித்து கூறியுள்ளார்.

மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளையொட்டி தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘காந்தி மற்றும் சாஸ்திரியின் கொள்கைகள் நிலைநாட்டப்படும். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு துணை நிற்பேன். அனைத்து எதிர்மறை சக்திகளும் என்னை தோற்கடிக்க முயற்சிக்கட்டும், ஆனால் நேர்மறை ஆற்றலின் ஒவ்வொரு துளியும் பஞ்சாபை வெற்றி பெறச்செய்யும், சர்வசே சகோதரத்துவம் வெல்லும், ஒவ்வொரு பஞ்சாபியும் வெல்வார்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.


Next Story