திருமலை திருப்பதி வழியில் சிறுத்தை - பக்தர்கள் அச்சம்


திருமலை திருப்பதி வழியில் சிறுத்தை - பக்தர்கள் அச்சம்
x
தினத்தந்தி 4 Oct 2021 10:57 AM GMT (Updated: 4 Oct 2021 10:57 AM GMT)

திருமலை-திருப்பதிக்கு செல்லும் வழியில் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திருப்பதி,

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை படிப்படியாக அதிகரித்து கொண்டிருக்கிறது. கொரோனா பரவல் பெரிதும் குறைந்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இது ஏழுமலையான் பக்தர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. பேருந்துகள் மூலமாகவும், தனியார் வாகனங்கள் மூலமும் திருமலைக்கு திரளாக வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். திருமலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளன.

பக்தர்களுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. வரும் 7ஆம் தேதி திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் திருப்பதி திருமலைக்கு செல்லும் வழியில் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.  திருமலை செல்வதற்கு ஒரு வழியும், திருப்பதி இறங்குவதற்கு மற்மொரு வழியும் உள்ளது.  

இதில் நேற்று இரவு திருமலையில் இருந்து திருப்பதிக்கும் இறங்கும் வழியில் அடிவாரம் அருகே சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடியது.  இதனனை காரில் வந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். தேவஸ்தானம் விஜிலன்ஸ்க்கு இந்த வீடியோ அனுப்ப பட்டு சைரன்ஸ் ஒலி எழுப்பி சிறுத்தையை விரட்டி அடித்தனர்.  

சாலைகளில் சிறுத்தை புலி நடமாட்டம் உள்ளதால் திருப்பதிக்கு வர மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

Next Story