தேசிய செய்திகள்

மனைவியை ரூ.500 க்கு விற்ற கணவர்! அதிர்ச்சி சம்பவம் + "||" + Woman, sold off by husband for Rs 500, raped in Gujarat

மனைவியை ரூ.500 க்கு விற்ற கணவர்! அதிர்ச்சி சம்பவம்

மனைவியை ரூ.500 க்கு விற்ற கணவர்! அதிர்ச்சி சம்பவம்
மனைவியை 500 ரூபாய்க்கு வேறொரு நபரிடம் கணவன் விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அகமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் 21 வயதுடைய பெண் ஒருவர் தன் கணவர் தன்னை வேறொரு நபரிடம் 500 ரூபாய்க்கு விற்று விட்டதாக  போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் அதிகாரி மதன் லால் கட்வர்சா கூறியதாவது:

எங்களிடம் இளம்பெண் ஒருவர் புகார் அளிக்க வந்தார். அதில், செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி இரவு 9 மணியளவில் அங்குள்ள லக்கி ஹோட்டலுக்கு அப்பெண் தன் கணவர் தீரஜ் ஜாங்கிட் உடன் சென்றுள்ளார்.
அங்கு வந்த சோனு சர்மா என்பவரிடம் தன் கணவர் 500 ரூபாயை பெற்றுக் கொண்டு, அந்த நபருடன் பெண்ணை போக சொல்லி உள்ளார்.

ஆள் நடமாட்டம் இல்லாத மறைவான பகுதிக்கு அழைத்துச்சென்ற சோனு சர்மா அப்பெண்ணை பாலியல் பாலியல் வன்கொடுமை செய்தாக புகாரில் தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்.

இந்த புகாரை அடுத்து பெண்ணின் கணவர் தீரஜ் ஜாங்கிட் மற்றும் சோனு சர்மாவை அடுத்த 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் சிகார் பகுதியில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். 

வெறும் 500 ரூபாய்க்காக மனைவியை கணவர் வேறொரு நபருக்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.