இந்தியாவில் 70% பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ்; மத்திய அரசு


இந்தியாவில் 70% பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ்; மத்திய அரசு
x
தினத்தந்தி 4 Oct 2021 11:12 PM GMT (Updated: 4 Oct 2021 11:12 PM GMT)

இந்தியாவில் 70% பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டு விட்டது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.


புதுடில்லி,

நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.  இந்த நிலையில், மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறும்போது, கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கொரோனாவுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 23 லட்சத்து 46 ஆயிரத்து 176 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை ஒட்டு மொத்தமாக 91 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டோரின் மொத்த எண்ணிக்கையில் 70 சதவீதம் பேருக்கு, முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது என தெரிவித்து உள்ளார்.


Next Story