புதிய நகர்ப்புற இந்தியா மாநாடு: பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்


புதிய நகர்ப்புற இந்தியா மாநாடு: பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 5 Oct 2021 1:44 AM GMT (Updated: 5 Oct 2021 1:44 AM GMT)

ஸ்மார்ட் சிட்டி மற்றும் அம்ருத் திட்டத்தின் கீழ், 75 நகா்ப்புற வளா்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளாா்.

புதுடெல்லி

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் 'ஆசாதி75 - புதிய நகர்ப்புற இந்தியா' மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். அங்குள்ள 75 மாவட்டங்களில் உள்ள 75,000 பயனாளிகளுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - நகர்ப்புற (PMAY -U) வீடுகள் திட்டத்தை பிரதமர் மோடி டிஜிட்டல் முறையில் திறந்து வைக்கிறார். அதன்பின், இந்த திட்டத்தின் பயனாளிகளுடன்  உரையாடுகிறார்.

ஸ்மார்ட் சிட்டி மற்றும் அம்ருத் திட்டத்தின் கீழ், 75 நகா்ப்புற வளா்ச்சித் திட்டங்களுக்கு அவா் அடிக்கல் நாட்டவுள்ளாா். ஃபேம்-2 திட்டத்தின் கீழ் லக்னோ, கான்பூா், வாரணாசி, பிரயாக்ராஜ், கோரக்பூா், ஜான்சி, காஜியாபாத் ஆகிய நகரங்களுக்கு 75 பேருந்துகளின் இயக்கத்தை அவா் தொடக்கி வைக்கவுள்ளாா். 

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற அமைச்சகத்தின் 75 திட்டங்கள் அடங்கிய சிறு புத்தகத்தையும் அவா் வெளியிடுகிறாா். இந்த நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல், அந்த மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

Next Story