தேசிய செய்திகள்

சோனியாகாந்தியுடன் சித்தராமையா சந்திப்பு! + "||" + Siddaramaiah meets Sonia Gandhi, discusses assembly bypolls in Karnataka

சோனியாகாந்தியுடன் சித்தராமையா சந்திப்பு!

சோனியாகாந்தியுடன் சித்தராமையா சந்திப்பு!
கர்நாடகாவில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் தொடர்பாக சோனியாகாந்தியை சந்தித்ததாக, சித்தராமையா தெரிவித்தார்.
புதுடெல்லி, 

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவை டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அழைப்பு விடுத்தார். அதை ஏற்று சித்தராமையா நேற்று டெல்லி சென்றார். அவருக்கு காங்கிரசில் தேசிய அளவில் பதவி அளிக்கப்படும் என்று யூகங்கள் எழுந்தன. சோனியாகாந்தியை சித்தராமையா சந்தித்து பேசினார். பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, ‘‘தேசிய அளவில் உங்களுக்கு பதவி அளிக்கப்பட உள்ளதா?’’ என்று கேட்கப்பட்டது.

இதுகுறித்து பதிலளித்த சித்தராமையா, “அது தவறான தகவல். கர்நாடகாவில், வருகிற 30-ந் தேதி நடக்க உள்ள 2 தொகுதிகளின் இடைத்தேர்தல் மற்றும் கட்சி விவகாரங்கள் குறித்து சோனியாவுடன் பேசினேன். தேசிய அரசியல் பற்றி எதுவும் விவாதிக்கவில்லை. எனக்கு கர்நாடக அரசியலில்தான் ஆர்வம் உள்ளது. ராகுல்காந்தி எனக்கு தேசிய பொதுச்செயலாளர் பதவி அளிக்க முன்வந்தபோது கூட அதை மறுத்துவிட்டேன். காரிய கமிட்டி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டேன். கர்நாடக மாநில காங்கிரசை மாற்றி அமைப்பது பற்றி சோனியாவுடன் பேசவில்லை. பொதுச்செயலாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலாவிடம் ஒரு பட்டியல் அளித்தேன். அதுபற்றி என்னுடன் பிறகு பேசுவதாக அவர் தெரிவித்தார்” என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கிண்டி ராஜ்பவனில் கவர்னருடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்புகிண்டி ராஜ்பவனில் கவர்னருடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு
கிண்டி ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு சந்தித்து, சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
2. விஜய் - யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு... காரணம் தெரியுமா?
முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் திடீரென சந்தித்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
3. புதின்-ஜின்பிங் சந்திப்பு: காணொலி காட்சி வாயிலாக நடந்தது
ரஷிய அதிபர் புதினுடன், சீன அதிபர் ஜின்பிங் காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
4. கருத்து சுதந்திர பிரச்சினை: கவர்னருடன், அண்ணாமலை சந்திப்பு
தமிழக கவர்னரை பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்து பேசினார்.
5. வடகிழக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
வடகிழக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் அடங்கிய குழு அக்கட்சி தலைவர் தலைமையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.