விவசாயிகள் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு


விவசாயிகள் மீது  திட்டமிடப்பட்ட தாக்குதல்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 6 Oct 2021 5:17 AM GMT (Updated: 6 Oct 2021 5:17 AM GMT)

விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை. நியாயம்தான் கேட்கிறோம் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி  இன்று லக்கிம்பூர் செல்ல இருந்த நிலையில், உத்திர பிரதேச அரசு அனுமதி மறுத்துள்ளது.  இந்த நிலையில்,செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ராகுல் காந்தி கூறியதாவது;-

ஜீப்பால் மோதி விவசாயிகள் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் கொல்லப்பட்ட வன்முறையின் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்படவில்லை. எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால்தான் இந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அகங்காரத்தின் காரணமாக விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிராகரிக்கிறது.

லக்னோ சென்ற மோடி லகிம்பூர் செல்லாதது ஏன்?  என்னையும் என் குடும்பத்தினரையும் துன்புறுத்தினாலும் நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம்.  இந்த விவகாரத்தை எழுப்புவது  உங்கள்(ஊடகங்கள்) பொறுப்பு. ஆனால், நாங்கள் கேள்வி எழுப்பினால், அரசியல் செய்வதாக கூறுகிறீர்கள்.  

விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை. நியாயம்தான் கேட்கிறோம்.  இரண்டு முதல் மந்திரிகளுடன் நான் இன்று லகிம்பூர் செல்ல உள்ளேன் அங்கிருக்கும் சூழலை புரிந்து கொள்ளவும் விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கவும்  லகிம்பூர் செல்கிறோம்” என்றார். 


Next Story