தேசிய செய்திகள்

சமையல் கேஸ் கசிந்து தீ விபத்து - 2 குழந்தைகள் பலி ! + "||" + 3 killed in delhis anand parbat fire due to gas leakage.

சமையல் கேஸ் கசிந்து தீ விபத்து - 2 குழந்தைகள் பலி !

சமையல் கேஸ் கசிந்து தீ விபத்து - 2 குழந்தைகள் பலி !
டெல்லியில் சமையல் கேஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி ஆகினர்.
புது டெல்லி,

தலைநகர் டெல்லியின் ஆனந்த் பார்பட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சமையல் கேஸ் கசிவால் நிகழ்ந்த தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலியாகினர்.

போலீஸ் துணை கமிஷனர் ஸ்வேதா சவுகான் கூறுகையில், சுசீலா என்கிற பெண் தனது 7 வயதான இரு குழந்தைகள்  மன்சி மற்றும் மோகன் ஆகியோருடன் டெல்லி ஆனந்த் பார்பட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில்  வசித்து வருகிறார். 

எதிர்பாராதவிதமாக, வீட்டில் உள்ள சமையல் சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்தது. உடனே அங்கு தீப்பற்றி எரியத் தொடங்கியது. இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த அவர்கள் மூவரும் சிக்கினர். அவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியாகினர் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த தீ விபத்து குறித்து விசாரணை செய்து வருகிறோம் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தம்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ விபத்து
மத்திய பிரதேசத்தில் உத்தம்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் இரு பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
2. அரியானா: வேளாண் சட்ட வெற்றியை கொண்டாட டெல்லி செல்லும் விவசாயிகள்
ஆயிரக்கணக்கான விவசாயிகள், நடனமாடியும், பாடியும், வேளான் சட்டங்களை வென்றதைக் கொண்டாட டெல்லிக்குச் செல்கிறார்கள்
3. டெல்லி: காற்றின் தரம் தொடர்ந்து 'மிக மோசம்' நிலையில் நீடிப்பு
தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் தொடர்ந்து நீடித்து வருகிறது.
4. மாசுபட்ட காற்றின் தரம் உயர்த்த டெல்லியில் ஒரு வாரம் கட்டுமான பணிகளுக்கு தடை: கெஜ்ரிவால்
டெல்லியில் மாசுபட்ட காற்றின் தரத்தை உயர்த்த முதல்-மந்திரி கெஜ்ரிவால் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அங்கு 1 வாரம் பள்ளிகள் மூடப்படுகின்றன. கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
5. காற்று மாசு: டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை
காற்று மாசுபடுவதை தடுக்க டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.