தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் அமைதியை சீர்குலைக்க ராகுல் காந்தி முயற்சி: பாஜக குற்றச்சாட்டு + "||" + Gandhi family using Lakhimpur Kheri tragedy as opportunity to save its sinking ship:

உத்தர பிரதேசத்தில் அமைதியை சீர்குலைக்க ராகுல் காந்தி முயற்சி: பாஜக குற்றச்சாட்டு

உத்தர பிரதேசத்தில் அமைதியை சீர்குலைக்க ராகுல் காந்தி முயற்சி: பாஜக குற்றச்சாட்டு
லகிம்பூர் வன்முறை தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாஜக விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி,

லகிம்பூரில் விவசாயிகள் மீது நடத்தப்பட்டது திட்டமிடப்பட்ட தாக்குதல் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடுமையாக சாடியிருந்தார். இந்த நிலையில், ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில், டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பாஜக செய்தி தொடர்பாளர்  சம்பித் பத்ரா, உத்தர பிரதேசத்தில் அமைதியை சீர்குலைக்க ராகுல் காந்தி முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். 

இது தொடர்பாக சம்பித் பத்ரா மேலும் கூறுகையில், “ விவசாயிகள் இறந்த விவகாரத்தை ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியினரும் அரசியலாக்க முயற்சிக்கின்றனர். லகிம்பூர் வன்முறை தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உத்தர பிரதேச அரசு விசாரணை தொடங்க முடிவு செய்துள்ளது. பிரேத பரிசோதனை தொடர்பாக கேள்வி எழுப்ப ராகுல் காந்தி என்ன மருத்துவரா?. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் விவசாயிகள் மீது நடந்த தடியடி பற்றி ராகுல் காந்தி ஏன் கேள்வி கேட்கவில்லை?” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. திரைப்பட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்: கட்சி நிர்வாகிகளுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள் விவாதங்கள் கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
2. உருமாறிய கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது; ராகுல் காந்தி டுவிட்
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாற்றம் அடைந்த புதிய ’ஒமிக்ரான்’ (B.1.1.529) வகை கொரோனா உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
3. மராட்டியத்தில் மார்ச் மாதம் பாஜக ஆட்சி அமைக்கும்: மத்திய மந்திரி கருத்தால் பரபரப்பு
வரும் மார்ச் மாதத்திற்குள் மராட்டியத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று மத்திய மந்திரி நாரயண் ரானே தெரிவித்துள்ளார்.
4. நாடு முழுவதும் வாரிசு அரசியல் செய்கிறது பாஜக..! ஆர்.எஸ்.பாரதி தாக்கு
நாடு முழுவதும் வாரிசு அரசியலைச் செய்து வரும் பாஜக, திமுகவை வாரிசு அரசியல் செய்கிறது என்று கூற தகுதியில்லை என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
5. அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மாணிக்கம் பாஜகவில் இணைந்தார்
அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றுள்ள சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்தார்.