சர்வதேச வரி மறுசீரமைப்பில் இந்தியா முன்னேற்றம் - நிர்மலா சீதாராமன் தகவல்


சர்வதேச வரி மறுசீரமைப்பில் இந்தியா முன்னேற்றம் - நிர்மலா சீதாராமன் தகவல்
x
தினத்தந்தி 6 Oct 2021 10:22 PM GMT (Updated: 6 Oct 2021 10:22 PM GMT)

சர்வதேச வரி மறுசீரமைப்பில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளதாக நிதி மந்தி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜி-20 நாடுகளின் நிதி மந்திரிகள் மாநாடு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற 130 நாடுகளும், பன்னாட்டு நிறுவனங்கள் எந்த நாட்டில் இயங்கினாலும் வரி செலுத்துவதை உறுதி செய்யும்வகையில், சர்வதேச வரியை மறுசீரமைக்க ஒப்புக்கொண்டன. குறைந்தபட்சம் 15 சதவீத சர்வதேச வரி விதிப்புக்கு சம்மதம் தெரிவித்தன.

இந்தநிலையில், நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், சர்வதேச வரி மறுசீரமைப்பு விவரங்களை இறுதி செய்யும் கட்டத்துக்கு இந்தியா வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Next Story