வன்முறையில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு தேவையில்லை... நீதி வேண்டும் - பிரியங்கா காந்தி


வன்முறையில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு தேவையில்லை... நீதி வேண்டும் - பிரியங்கா காந்தி
x
தினத்தந்தி 6 Oct 2021 10:37 PM GMT (Updated: 6 Oct 2021 10:37 PM GMT)

லகிம்பூர் கேரியில் நடந்த வன்முறையில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு தேவையில்லை, நீதி வேண்டும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

லகிம்பூர் கேரி, 

நீண்ட போராட்டத்துக்கு பின் லகிம்பூர் கேரி மாவட்டத்துக்கு நேற்று இரவு சென்றடைந்த ராகுல், பிரியங்கா மற்றும் காங்கிரசார், வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்தனர். முதலில் அவர்கள் பலியா தாலுகாவை சேர்ந்த லவ்பிரீத் சிங் என்ற விவசாயியின் வீட்டுக்கு சென்றனர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அவர்கள் ஆறுதல் கூறினர்.பின்னர் அங்கிருந்து அவர்கள், வன்முறையில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ராமன் காஷ்யப் வீட்டுக்கு சென்றனர். நிகேசன் தாலுகாவில் அமைந்துள்ள அவரது வீட்டில் உறவினர்களை சந்தித்து காங்கிரசார் ஆறுதல் கூறினர்.

இதைத்தொடர்ந்து பிற விவசாயிகளின் வீடுகளுக்கும் ராகுல், பிரியங்கா மற்றும் காங்கிரசார் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். ராகுல், பிரியங்கா வருகையையொட்டி லகிம்பூர் கேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் வன்முறையில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு தேவையில்லை, நீதி வேண்டும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “வன்முறையில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு தேவையில்லை..., அவர்களுக்கு நீதி வேண்டும். அவர் (அஜய் மிஸ்ரா) மத்திய உள்துறை இணை மந்திரி பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் அது சாத்தியமில்லை. அவரின் கீழ் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வாய்ப்பில்லை. எஃப்ஐஆர் இல்லாமல் எங்களை கைது செய்ய முடியும்பொழுது, ஏன் அவரை (ஆஷிஷ் மிஸ்ரா) கைது செய்ய முடியாது” என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார். 

Next Story