பிரதமர் மோடி இன்று உத்தரகாண்ட் பயணம்


பிரதமர் மோடி இன்று உத்தரகாண்ட் பயணம்
x
தினத்தந்தி 7 Oct 2021 5:25 AM GMT (Updated: 7 Oct 2021 5:26 AM GMT)

பிரதமர் மோடி இன்று 35 பி எஸ் ஏ ஆக்சிஜன் ஆலைகளை நாடு முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

புது டெல்லி,

பிரதமர் மோடி இன்று உத்தரகாண்ட் பயணம் செய்ய உள்ளார். அங்கு பி எம் கேர்ஸ் திட்டத்தின் கீழ், 35 பி எஸ் ஏ ஆக்சிஜன் ஆலைகளை நாட்டுக்காக அர்ப்பணிக்க உள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைத்து இன்று காலை 11 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 35 பி எஸ் ஏ ஆக்சிஜன் ஆலைகள் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்படும். இது நாட்டுக்கான  மிக முக்கிய மருத்துவ உட்கட்டமைப்பு ஆகும்” என்று பதிவிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் மன்சுக் மண்டாவியா, அம்மாநில கவர்னர் குர்மித் சிங் மற்றும் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி  ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

இதன்மூலம், நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிளும் பி எஸ் ஏ ஆக்சிஜன் ஆலைகளை  இயக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதுவரை 1224 பி எஸ் ஏ ஆக்சிஜன் ஆலைகள், பி எம் கேர்ஸ் நிதி மூலமாக தொடங்கப்பட்டுள்ளது. அவற்றுள் 1100 ஆலைகள் நாளொன்றுக்கு 1750 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தயாரிக்கும் வகையில் இயங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் 7000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.அவர்கள் இண்டர்நெட் ஆப் திங்க்ஸ்(ஐ ஓ டி) எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிகழ்நேர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

Next Story