நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 9 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்: காங்கிரஸ்


நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 9 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்: காங்கிரஸ்
x
தினத்தந்தி 7 Oct 2021 7:03 PM GMT (Updated: 7 Oct 2021 7:03 PM GMT)

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, அடுத்த 9 நாட்களுக்கு தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை பிரதமர் மோடி குறைக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் அல்கா லம்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் அல்கா லம்பா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த மாதம் 27-ந்தேதியில் இருந்து தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை ஏறி வருகிறது. லக்னோ சென்றிருந்த பிரதமர் மோடி, கடவுள் ராமர் அருள் வேண்டி, தீபாவளிக்கு 19 லட்சம் விளக்குகள் ஏற்றுமாறு கூறியிருக்கிறார். அதுபோல், கடவுள் அருள் கிடைப்பதற்கும், சாமானியர்களுக்கு நிம்மதி அளிப்பதற்கும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, அடுத்த 9 நாட்களுக்கு தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை பிரதமர் மோடி குறைக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் மோடி அரசு சம்பாதித்த ரூ.24 லட்சம் கோடி எங்கே போனது? சமையல் எரிவாயு, ஆயிரம் ரூபாயை தொட்டு விட்டது. ஆனால், மிகக்குறைந்த தொகைதான் மானியமாக கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story