தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இன்று 2,943 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர் + "||" + A further 2,620 people were confirmed to be infected with corona in the Maharastra today

மராட்டியத்தில் இன்று 2,943 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்

மராட்டியத்தில் இன்று 2,943 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
மராட்டியத்தில் இன்று மேலும் 2,620 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும்  இன்று மேலும் 2,620 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 65,73,092 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 59 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,39,470 ஆக அதிகரித்துள்ளது. 

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 2,943 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 63,97,018 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது வரை மாநிலத்தில் 33,011 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. முதியோர் இல்லத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 55 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!
மராட்டியத்தில் முதியோர் இல்லம் ஒன்றில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 55 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியம்: பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மினி டிரக் மோதல் - 4 பேர் பலி
மராட்டியத்தில் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மினி டிரக் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
3. மராட்டியத்தில் மார்ச் மாதம் பாஜக ஆட்சி அமைக்கும்: மத்திய மந்திரி கருத்தால் பரபரப்பு
வரும் மார்ச் மாதத்திற்குள் மராட்டியத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று மத்திய மந்திரி நாரயண் ரானே தெரிவித்துள்ளார்.
4. பதிவெண் இல்லா காரில் பயணம் செய்த ஓவைசி - டிரைவருக்கு அபராதம்
பதிவெண் இல்லாத காரில் ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி பயணம் செய்துள்ளார்.
5. மது போதையில் நண்பன் கன்னத்தில் அறைந்ததில் உயிரிழந்த நபர்
மது போதையில் நண்பன் கன்னத்தில் அறைந்ததில் நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.