தேசிய செய்திகள்

டென்மார்க் பிரதமர் இந்தியாவுக்கு வருகை; பிரதமர் மோடி வரவேற்பு + "||" + Danish PM visits India; Welcome to Prime Minister Modi

டென்மார்க் பிரதமர் இந்தியாவுக்கு வருகை; பிரதமர் மோடி வரவேற்பு

டென்மார்க் பிரதமர் இந்தியாவுக்கு வருகை; பிரதமர் மோடி வரவேற்பு
இந்தியாவுக்கு வருகை தந்த டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சனை, பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.

புதுடெல்லி,

டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சன் 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.  அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து இருநாட்டு உறவுகள் பற்றி பேச உள்ளார்.

இந்தியாவும், டென்மார்க்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பசுமை யுக்தி கூட்டுறவை ஏற்படுத்தி கொண்டுள்ளன. அதுபற்றியும், இருநாடுகளுக்கும் இடையே உள்ள பல்வேறு விஷயங்கள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளன. டென்மார்க்கில் 60-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்களும், இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட டென்மார்க் நிறுவனங்களும் இருக்கின்றன என்றும், தொழில்நுட்பங்கள், விவசாயம், கப்பல் போக்குவரத்து போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பு இருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சன் இன்று இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.  அவரை, பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.  டெல்லி ராஷ்டிரபதி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய மெட்டே, எங்களின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியாவை நாங்கள் நினைக்கிறோம்.

இந்த வருகையை டென்மார்க் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் இருதரப்பு உறவுகளுக்கான மைல்கல்லாக பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. 3 வேளாண் சட்டங்கள் வாபஸ்: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்ததற்கு, அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய, வணிகர் சங்கங்களை சேர்ந்தவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
2. ஜனாதிபதி கோவிந்த் அரியானா வருகை; முதல்-மந்திரி, கவர்னர் வரவேற்பு
அரியானாவுக்கு இன்று வருகை தந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது.
3. பெட்ரோகெமிக்கல் மண்டலம் கைவிடும் அறிவிப்பு: தமிழக அரசின் முடிவுக்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
பெட்ரோகெமிக்கல் மண்டலம் கைவிடும் அறிவிப்பு: தமிழக அரசின் முடிவுக்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு.
4. சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களை நேசமுடன் வரவேற்ற மு.க.ஸ்டாலின்
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேசமுடன் வரவேற்றார். அப்போது அவர்களுக்கு இனிப்பு, எழுது பொருட்கள் வழங்கி கலந்துரையாடினார்.
5. போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு மணிமண்டபம்: மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு மணிமண்டபம்: மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு.