தேசிய செய்திகள்

தெலங்கானா, கோவாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் + "||" + Current corona situation in Telangana and Goa

தெலங்கானா, கோவாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

தெலங்கானா, கோவாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
தெலங்கானாவில் தற்போது 4,288 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்,

தெலங்கானா மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் இன்று 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தெலங்கானாவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,67,725 ஆக அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,929 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இன்று 245 பேர் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தெலங்கானாவில் தற்போது 4,288 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 6,59,508 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெலங்கானா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

அதே சமயம் கோவா சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு இன்று 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவாவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,77,040 ஆக அதிகரித்துள்ளது.

கோவாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,326 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இன்று 74 பேர் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கோவாவில் தற்போது 733 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 1,72,981 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கோவா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ரஷியாவில் பரிதாபம்! கொரோனாவால் அக்டோபரில் அதிக உயிரிழப்பு..!
ரஷியாவில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 75,000 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
2. புதுச்சேரியில் வரும் 6 ஆம் தேதி முதல் 1 - 8-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு
புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 6ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
3. மெட்ரோ ரெயிலில் 6 மாதத்தில் 1.30 கோடி பேர் பயணம்
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுபாடுகளில் அரசு தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரெயில் சேவை கடந்த ஜூன் 21-ந்தேதி முதல் தொடங்கியது.
4. கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் கமல்ஹாசன்
கொரோனா சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன் குணமடைந்து விட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
5. ஒமிக்ரான் அச்சுறுத்தல்: மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
ஒமிக்ரான் கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் வரும் டிசம்பர் 31- ஆம் தேதி வரை தற்போது உள்ள கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.