தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் படம் : மத்திய அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் + "||" + Prime Minister's picture on corona vaccine certificate: Kerala High Court notice to the Central Government

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் படம் : மத்திய அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் படம் : மத்திய அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றிருப்பது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது. அதில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றுள்ளது. 

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் உள்ளது குறித்து மத்திய அரசுக்கு, கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

கேரளா கோட்டயத்தை சேர்ந்த எம். பீட்டர் என்பவர் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இந்திய குடிமகனின் அடிப்படை உரிமையை பறிப்பதாக சொல்லி நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இரண்டு வாரங்களில் இது தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் விளக்கம் கொடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

மத்திய அரசும், பிரதமரும் தங்களது கடமையையே செய்துள்ளனர். இதற்காக சான்றிதழில் படம் போடக்கூடாது என்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் போது இந்த படம் சிக்கலை கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மற்ற நாடுகளில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழையும் நீதிபதியின் பார்வைக்காக சமர்ப்பித்திருந்தார். அந்த சான்றிதழ்களில் அந்நாட்டு தலைவர்களின் படங்கள் இடம் பெறவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஜப்பான் உடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்த விருப்பம், பிரதமர் நரேந்திர மோடி
ஜப்பானின் புதிய பிரதமர் புமியோ கிஷிடாவுடன் இணைந்து கூட்டுறவை மேலும் வலுப்படுத்த பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்து உள்ளார்.
2. முதல்-மந்திரி மற்றும் பிரதமராக 20 ஆண்டுகளை நிறைவு செய்தார் பிரதமர் மோடி; அமித் ஷா வாழ்த்து
பொதுப்பணியில், நாட்டின் உயரிய பொறுப்புகளை வகித்து 20 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக பிரதமர் மோடிக்கு அமித் ஷா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
3. ராமாயண டிவி சீரியல் நடிகர் மரணம் - பிரதமர் மோடி இரங்கல்
ராமாயண டிவி சீரியல் நடிகர் அரவிந்த் திரிவேதி மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
4. வேளாண் சட்டங்களை அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கிறார்கள் - எதிர்க்கட்சிகள் மீது மோடி கடும் தாக்கு
விவசாய சீர்திருத்தங்களை அரசியல் காரணமாக எதிர்க்கிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி ஆவேச தாக்குதல் தொடுத்துள்ளார்.
5. கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறோம்-பிரதமர் மோடி
தடுப்பூசி செலுத்துவதில் வெற்றி பெற்றதற்கு காரணம் இந்தியாவின் சுய சார்பு கொள்கை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.