தேசிய செய்திகள்

ஐதராபாத்: கனமழையால் 150 குடும்பங்கள் நிவாரண முகாமிற்கு மாற்றம் + "||" + Heavy Rain Lashes Hyderabad, 150 Families Shifted to Relief Camp

ஐதராபாத்: கனமழையால் 150 குடும்பங்கள் நிவாரண முகாமிற்கு மாற்றம்

ஐதராபாத்: கனமழையால் 150 குடும்பங்கள் நிவாரண முகாமிற்கு மாற்றம்
ஐதராபாத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 150 குடும்பங்கள் நிவாரண முகாமுக்கு மாற்றப்பட்டது.
 ஐதராபாத்,

ஐதராபாத்தின் ஹயாத் நகரில் உள்ள குடியிருப்பு காலனிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள குடியிருப்பு காலனிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. மேலும் பல வீடுகளிலுள்ள பொருட்களை வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டதாக அங்குள்ள மக்கள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து மழை  பெய்ததால் நகரின் சில பகுதிகளிலுல்ல சாலைகளில் முழங்கால் வரை தண்ணீர் தேங்கியது.

இதனால் அங்கு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 150 குடும்பங்கள் நிவாரண  முகாமிற்கு மாற்றப்பட்டது. அவர்களுக்கு தொடர்ந்து உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் சாரூர்நகரில் உள்ள லிங்கோஜிகுடா பகுதியில்  131.5 மிமீ மழை பெய்துள்ளது. மேலும் செகந்திராபாத்தின் நகர்புற பகுதியில் 95.3 மிமீ மழையும்,  பாட்டிகட்டாவில் 69.3 மிமீ மழையும் பெய்துள்ளது.  

ஐதராபாத் மாநகராட்சி மேயர் கத்வால் விஜய லக்ஷ்மி மற்றும் எல்.பி. நகர் எம்.எல்.ஏ டி.சுதீர் ரெட்டி ஆகியோர் மழையால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர்.  மேலும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மேயர், மழையால் எந்த உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினார். மாநிலத்தில் மேலும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. டிசம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பொழிவு இருக்கும்- இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்தியாவில் நடப்பு ஆண்டு பருவமழை நன்றாக பெய்து வருகிறது.
2. மதுரையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் மழை
தமிழகத்தில் மதுரையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட கூடுதல் மழை பெய்து உள்ளது.
3. கனமழை: தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
4. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
விஜயராகவா சாலை, ஜி.என்.சாலையில் கொட்டும் மழையிலும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
5. சென்னையில் இரவு முழுவதும் பெய்த கனமழை: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்...!!
சென்னையில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.