உத்தர பிரதேச விவசாயிகள் போராட்ட வன்முறை; ஜனாதிபதியை சந்திக்க காங்கிரஸ் முடிவு


உத்தர பிரதேச விவசாயிகள் போராட்ட வன்முறை; ஜனாதிபதியை சந்திக்க காங்கிரஸ் முடிவு
x
தினத்தந்தி 10 Oct 2021 7:15 AM GMT (Updated: 10 Oct 2021 7:15 AM GMT)

உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதியதில் 2 பேர் இறந்தனர்.


லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதியதில் 2 பேர் இறந்தனர். அதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட வன்முறையில் மேலும் 6 பேர் பலியாகினர்.
விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாகவும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வந்த நிலையில், நேற்று அஜய் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். 

உத்தர பிரதேச வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்,  உத்தர பிரதேச விவசாயிகள் வன்முறை சம்பவம் குறித்து உண்மைகள் அடங்கிய அறிக்கையை  ஜனாதிபதியிடம் வழங்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதியை சந்திக்க காங்கிரஸ் கட்சி நேரம் கேட்டுள்ளது. ராகுல் காந்தி தலைமையில் 7 பேர் கொண்ட குழு ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டுள்ளது. 


Next Story